இலங்கை சரியான பாதையில் பயணிக்கவில்லை என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிளின்கன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி குறித்த அமெரிக்க செயலணியின் பிதானி சமந்தா பவர் ஆகியோரிடம் கோரியுள்ளனர்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இன்னமும் திருப்தி கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமென கோரி தொடர்ந்தும் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள் பற்றாக்குறை கவலையளிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றனர்.
இலங்கைக்கு மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென 10 காங்கிரஸ் சபை உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.