12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
லங்கா சதொச ஊடாக குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 180 ரூபா என்ற புதிய விலைக்கு விற்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசியின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டு 194 ரூபா என்ற புதிய விலைக்கு விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் (இறக்குமதி) விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.