குடத்தனை உப தபாலகருக்கு எதிராக இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கடந்த 2018 ம் ஆண்டு வரை உப தபாலதிபாராக பணியாற்றிவந்திருந்தவர் வறிய மக்களது பொதுசன மாதாந்த கொடுப்பனவு, மின்சார பட்டியல் கொடுப்பனவு, தேசிய சேமிப்பு வங்கி உட்பட பல்வேறு மக்கள் நிதிகளை மோசடி செய்தும் மதி நுட்பமாக ஏமாற்றியும் உள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மணல்காடு, குடத்தனை, அம்பன் பகுதிகளை சேர்ந்த பலரும் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த உப தபாலகர் கடந்த 2018 ம் ஆண்டுவரை குறித்த குடத்தனை உப தபாலகத்தில்பணியாற்றி வந்துள்ள நிலையில் மக்கள் பண மோசடி தொடர்பில் குறித்த உபதபாலகருடன் முரண்பட்டிருந்த நிலையில் தாமகவே பதவியிலிருந்து விலகியும் குறித்த தபால் திணைக்களத்தால் 3 ஆண்டுகளின் பின்னர் பதவியிலிருந்து நீக்கிய நிலையில் மீண்டும் ஏதோ ஒருவகையில் பணி மீள் நியமனம் பெற்று கடந்த சனிக்கிழமை இரகசியமான முறையில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றிய பதில் உப தபாலகரை பணிநீக்கம் செய்து குறித்த உபதபாலகர் பணியில் இணைக்கப்பட்டார்.
இந்நிலையில் இதனை அறிந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை சம்பவ இடத்திற்கு வருகைதந்த பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க
பாதிக்கப்பட்ட மக்களை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் குறித்த உப தபாலகர் இனி குடத்தனை உப தபாலகத்திறக்கு பணிக்கு வருகை தர மாட்டார் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நேற்று குறித்த உபதபாகலர் பணிக்காக வந்தவேளை அங்கு தமது பணத்தை கேட்க சென்ற பாதிக்கப்பட்ட மக்களை கண்டவுடன் அலுவலகத்தை திறந்தும் உள் செல்லாமல் வெளியேறியுள்ளார்.
இதே வேளை குறித்த மோசடிகள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையோ மேற்கொள்ளாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தபால் திணைக்களம் செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்றைய தினம் குறித்த தபாலகரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் பருத்த்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை தான் நிரந்தரமாக பணியிலிருந்து விலகியதாக அறிவித்து சென்ற வேளை அங்கு பதில் கடமை ஆற்றியயவர் நான்கரை ஆண்டுகள் பணியாற்றியும் எந்தவித பிரதி உபகாரமும் இன்றி பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பாதிக்கப்பட்ட மக்கள் குடத்தனை உப தபாலகத்திற்க்கு குறித்த குற்றச்சாட்டு உடைய உபதபாலகர் வேண்டாம் எனவும் தெரிவிக்கின்றனர்