இலங்கைக்கான கடன் சலுகை தொடர்பிலான நிலைப்பாட்டை தளர்த்துமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளது.
ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சீனாவுடனான கடன் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவது இலகுவான விடயமல்ல. கடன் வழங்கும் அனைத்து தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது அவசியம் என்பதனால், கடன் மறுசீரமைப்பு தேவையென சீன அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
சீனா கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வேறு நடைமுறையை பின்பற்றுவதனால், ஏனைய தரப்பினரும் இணங்கும் திட்டமொன்று அவசியப்படுவதாகவும் சீனாவின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பது இலங்கையின் தற்போதைய பாரிய சவால் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.