பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு இராணுவத்தால் வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்…..!

வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  J410 கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு  வீடு அமைத்து கொடுப்பதற்க்காக யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வந்தன வீரசூரியவினால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9:30 மணியளவில் இறை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடிக்கல் நாட்டு நிகழ்வில் கட்டைக்காடு  55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் குணரத்ன, 551 வது படை பரிவு தளபதி பிரிகேடியர் சிந்திக்க விக்கிரமசிங்க, 552 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெயவீர, 553 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெயகொடி, பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி, உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்துமால் கொட மற்றும் இராணுவ அதிகாரிகள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் என் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த வீட்டிற்க்கான நிதியுதவியினை திருமதி செய்லா இமானுவேல் வழங்கியிருந்த நிலையில் அதற்க்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் செய்திருந்துடன் பயனாளியான திருமதி ஜயரூபன் நந்தினிக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளை பருத்தித்துறை 551 வது படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது

Recommended For You

About the Author: admin