மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று முன்தினம்  (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி, மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்காக துவிச்சக்கரவண்டி ஒன்றிற்கு 4000 ரூபாவும், 1000 ரூபாவும்,  உரிமக் கட்டணமாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான வாகனங்கள், கிரானைட் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் நேற்று முதல் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.

அத்தகைய இறக்குமதிகள் அங்கீகரிக்கப்பட்ட காண்டோமினியம் திட்டங்கள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டு வாரியத்தின் கீழ் வராத அரசாங்க திட்டங்களுக்கு செய்யப்படலாம்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் தொடர்புடைய இறக்குமதிகளை மேற்கொள்வதில், திட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் அளவுகள் 180 நாள் கடன் கடிதங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

 

Recommended For You

About the Author: admin