உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது என்றும், இது உக்ரைன் நீண்ட காலத்துக்கு தன்னை தற்காத்து கொள்வதை உறுதி செய்யும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மக்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடரும்போது அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றார்.