கிழக்கு மாகாணத்தின் முதல் பெண்கள் பாடசாலையான ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் நவீன விசேட கல்வி அலகுகளான ஸ்மார்ட் வகுப்பு, தகவல் தொழினுட்ப பிரிவு, விவசாயப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் சித்திரக் கண்காட்சியும் அவர்களது நூல் வெளியீடும் இடம்பெற்றது.
தொடர்ந்து மாணவிகளுக்கு சின்னம் சூட்டுதல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு சான்றிழ் வழங்கல் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் உமர்மௌலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா றிப்கா, திட்டமிடல் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றமீஸ், பட்டிருப்பு கல்வி வலய அழகியற் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. சுந்தரலிங்கம் ஆகியோருட்பட பாடசாலை பிரதி அதிபர் ஏ. அப்துல் நாஸர் உட்பட பிற பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி அலுவலர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.