
2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் படிப்படியாக அதிகரித்த கடலரிப்பு தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் உட்புகுந்துள்ளது.
இந்நிலையில், கடலரிப்பை நிரந்தரமாக தடுக்கும் வகையில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேசத்தின் கடல் பரப்பில் நீரோட்ட அளவினை பருவகாலத்திற்கேற்ப கணிப்பீடு செய்தவன் மூலமே நிரந்தர தீர்வு நோக்கி நகர முடியுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடலரிப்புக்கான நிலையான ஆய்வினை தென்கிழக்கு பல்கலைக்கழகம், கடலோர பாதுகாப்பு கரையோர வளமுகாமைத்துவ திணைக்களத்துடன் இனைந்து இதற்கான ஆய்வினை செய்து நிரந்தர தீர்வினை நோக்கிய திட்டத்தை தயாரிப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டது.
இவ்வாய்வினை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பணிப்புரையில் பொறியியல் பீட நிபுணர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், தேசிய அருங்கலைகள் பேரவையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் றியாஸ், கரையோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர துலசிதாசன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர்கள் சிரேஷ;ட பொறியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.