கல்முனையின் பல கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சம்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் கிராமங்களுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.பிரதேசத்தில் கடந்த ஒருவாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,மக்கள் குடியிருப்பு நிறைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த குறித்த தனியன் காட்டுயானை ஒன்று அங்குள்ள வீட்டு மதில் மற்றும் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
கரவாகுப்பற்று கல்முனைக் கண்டத்திலுற்குள் நுழையும் காட்டுயானைகள் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் தங்களை அச்சுறுத்தி வருவதாக விசனம் வெளியிட்டுள்ள மக்கள் யானைகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews