முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு கடிதத்தில் ஜனாதிபதி செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க சத்திய கடிதத்தின் ஊடாக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.