
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்கும் 17 மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்களும் 15 வயதுக்கு மேற்பட்ட 9 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.