மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் நீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டும் போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் ஜானக ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
அத்துடன், இந்த நிலைமையை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் தேசிய அமைப்பில் சேர்க்கத் தயாராக உள்ளது. ஆனால் தேவையான எரிபொருளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்பது சந்தேகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஆண்டிலும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும் நிலை காணப்படுவதால் எரிபொருளை கொள்வனவு செய்வது பெரும் சவாலாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.