தனது ஒன்பது வயது மகளை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயினால் சித்திரவதைக்கு உள்ளான மகள், கைகால்களில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பல்லேவெல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.