இலங்கையில் டீசல் பிரச்சினையை தீர்க்க தயாராகும் மத்திய கிழக்கு நாடு…!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று 50 சதவீத பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்தன. மூன்று நாட்களாக இலங்கை டிப்போ முன் தனியார் பேருந்துகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்துகள் இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக டிப்போ முகாமையாளர் டி. அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களுக்கு இந்நிலை நீடித்தால் பேருந்து சேவைகள் தடைபடும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு எரிபொருளை கொண்டு வருவதற்கு கட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

 

Recommended For You

About the Author: admin