திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்பு

திருகோணமலை -மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2310 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கை நேற்று(26) திருகோணமலை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பல்நோக்கு கூட்டுறவு சங்க களஞ்சியசாலையில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

இதன்போது ஒரு பரலில் 210 லீட்டர் வீதம், 11 மண்ணெண்ணெய் பரல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin