
யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும்,“உதிரம் கொடுத்து உயிர்கள் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்றிட்டத்தில் நல்லுார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பி.சூரியபிராகஸ் வழிகாட்டலில் இன்று நல்லுார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் அரியாலை சரஸ்வதி இளைஞர் கழக, ஆதரவுடன் சரஸ்வதி சன சமூக நிலையத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் நல்லுார் இளைஞர் சம்மேளன அதிகாரி யுவராஜ், மாவட்ட சம்மேளன உப தலைவர், நல்லுர் இளைஞர் கழக சம்மேளன அமைப்பாளர் ச.துவாரகன், நல்லுார் இளைஞர் கழக சம்மேளன தலைவர் ச.பிரணவன், சரஸ்வதி சனசமூக நிலையத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய ஊடக இணைப்பாளருமான நி.கவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதுடன் இரத்த கொடையாளர்களை ஊக்குவித்தனர்.