பிரான்ஸில் இருந்து நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இன்று (27) அதிகாலை நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்றரை மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத் தொகுதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.

பாரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான  யு.எல்.564 விமானத்தில் அவர் வருகை தந்திருந்தார்.

விமான நிலையத்தில் பரிசோதனைகள் எதுவுமின்றி வெளியேறும் கிறீன் செனல் வழியாக வெளியேற முயற்சித்த போதே சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 2.414 கிலோ கிராம் தங்க ஆபணரங்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்னர். அவற்றில் 586.8 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலியை சந்தேக நபர் கழுத்தில் அணிருந்தார் எனவும் ஏனைய தங்க ஆபரணங்கள் அவரது பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுமார் 10 வருடங்களாக பாரிஸில் பணிபுரிந்த சந்தேக நபர் மாலம்பே பிரதேசத்தை சேர்ந்தவர்.

Recommended For You

About the Author: admin