
தங்கச் சங்கிலி திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயது சந்தேக நபர் கிரிந்திவெல காவல்துறையினரின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுடன் சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை, அவர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.