
நாட்டில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகின்ற வதந்திகளையடுத்தே குறித்த அறிவிப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளை சுட்டிக்காட்டி மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.