
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெரும் திருவிழாவின் சப்பறம், தேர், தீர்த்தத்திருவிழாக்களின் போது தொண்டர் சேவையாற்றிய இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27.08.2022) நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் நல்லூர் சிவகுரு ஆதீன மண்டபத்தில் சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திற்க்குரிய தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஆதீன தொண்டர்கள், ஆன்மீகப் பெரியார்கள், இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத்தொண்டர் சபை தேசிய ஆணையாளர் சிவத்திரு.வை.மோகனதாஸ், மகளிர் பொறுப்பாசிரியர் கேதீஸ்வரி,தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு.வை.ஜெகதாஸ், தொண்டர்கள் கலந்து கொண்டு தொண்டர்களை கைரவித்தனர்.