இலங்கை பூராகவும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடியால் நாடுபூராகவும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் மக்கள் வாகனங்களுடன் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பது அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முத்துராஜவலை எரிபொருள் முனையத்தில் இருந்து டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதோடு பெட்ரோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.