
யாழ்ப்பாணம் – கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பிடிக்கப்பட்ட நிலையில், முன்னதாக யாழ்ப்பாணம், பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.