பல பில்லியன் ரூபாய்கள் கடனில் சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பங்குகளை விற்க தயாராகும் அரசாங்கம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51% பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பல ஆண்டுகளாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இது திறைசேரிக்கு சுமையாக உள்ளது. தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் மேலும் நஷ்டத்தை சந்தித்தது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகளவில் கடந்த ஆண்டு விமானத் துறையின் திறன் சுமார் 60% முதல் 80% வரை குறைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 2020/21 நிதியாண்டில் 70% வருமான இழப்பை சந்தித்தது. சிறிலங்கன் எயார்லைன்ஸின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இது இலங்கையில் 401 பில்லியன் ரூபாய்கள்”, எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin