அண்ணன் உயிரிழந்து 14வது நாளில் தாயின் கண்முன்னால் உயிரிழந்த 17 வயது சிறுமி.. |

அண்ணன் உயிரிழந்து 14 நாட்களில் தங்கை யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கண்டி – ஹசலக யாய பஹா என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

அனுத்தரா இந்துனில் என்ற 17 வயதான சிறுமியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் அண்ணன் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அண்ணன் இறந்து 14வது நாளில் தனது தயாருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோது தாயின் கண் முன்னால் யானை சிறுமியை தாக்கியுள்ளது.

படுகாயமடைந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் மரணம் தொடர்பில் அவரது உறவினரான பெண்ணொருவர் ஊடகங்களிடம் தொிவிக்கையில்,

27 ஆம் திகதி இரவில் இருந்து காட்டு யானைகள் கிராமத்திற்குள் வந்திருந்தன. விடிய விடிய யானை வெடிகளை கொளுத்திய போதிலும் யானைகள் திரும்பிச் செல்லவில்லை.

நாங்கள் உறங்கவுமில்லை. வீட்டுக்கு எதிரிலேயே யானை தாக்குகிறது என்று சிறுமியின் தாய் சத்தமிட்டார்.

எங்களால் வெளியிலும் வர முடியவில்லை. யானை விரட்டுவதே இதற்கு காரணம். யானை, யானை என்று மக்களுக்கு சத்தமிட மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளார்.

தாயாருக்கு எதிரிலேயே யுவதியை யானை தாக்கியதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

யுவதியின் மரணம் காரணமாக தாய் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார். இந்த அகால மரணத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்

உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin