இலங்கையின் கடன் விவகாரம் – களத்தில் இறங்கப்போகும் ஜப்பான்

இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்கும் ஏனைய நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார்.

கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை ஒன்றிணைக்குமாறு ஜப்பானை இலங்கை கோரும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு தமது நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வில்லை என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi) முன்னதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கை தரப்புடன் சீனா பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், எனினும், பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்த ஏற்பாடும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin