
திடீரென பெய்த மழை காரணமாக யாழ்.பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வியாபாரிகள் இதன்போது யாழ்.மாநகரசபையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கால்வாய்களுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் தேங்கியுள்ளநிலையில், மழைநீர் செல்வதற்கான வழியின்றியே இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபைக்கு இது தொடர்பில் பல முறை இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ். நகரசபை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது யாழ். பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு யாழ். மாநகர சபை எந்தவகையில் பொறுப்பு கூற வேண்டுமோ அதே அளவு இப்பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களும் மற்றும் பொதுமக்களும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்துள்ளார்.