அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்துக்களின்படி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு பிரச்சினை இல்லையென்றாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில் சிக்கல் இருப்பதாகத் தோன்றுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எப்பொழுதும் சாதகமாக சிந்திக்க வேண்டும் எதிர்மறையாக இருக்க வேண்டும் என்று கூறிய நிமல் சிறிபால டி சில்வா, பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவிடம் அரைமணி நேரம் கூறியும் பயனில்லை, ரணில் விக்கிரமசிங்க அச்சமின்றி வந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற நாளை விட இன்று நாடு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை உடன்படிக்கை கைச்சாத்திடப்படக்கூடிய சூழல் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மூன்று நாள் இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.