நாட்டில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய இந்த அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெறுமதி சேர் வரி (vat tax) இன்று முதல் 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்திருந்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் வற் வரியை அதிகரிப்பது தொடர்பான யோசனையையும் முன்மொழிந்திருந்தார்.
அதனையடுத்து வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நேற்றைய தின நடைபெற்றிருந்தது. இதவேளை இன்றைய தினமும் நடைபெறவுள்ளது.
இந்நிலையிலேயே பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் நடைபெறும் வாக்கெடுப்பினைத் தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.