மருத்துவக் கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் சிகிச்சை நிலையங்களில் நிபுணத்துவ மருத்துவர்களை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவர்களுக்கு செலுத்தப்படும் கட்டணத் தொகை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு நிகராக மருத்துவ ஆலோசனை கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெற்கு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவ ஆலோசனை கட்டணமாக 2400 ரூபா அறவீடு செய்யப்பட்டதாகவும், தற்பொழுது அந்த தொகை 3500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.