தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1715.85 டொலராக பதிவாகியுள்ளது.
சுமார் 12.35 டொலர்கள் குறைந்து இந்த விலை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இவ்வாறு விலை குறைவு பதிவாகி வரும் நிலையில் மேலும் விலை குறைவு பதிவாகலாம் எனவும், இதன் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உலக சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 623,418ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 180500 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 166500 ரூபாவாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி வீதங்களை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தங்க விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டொலரின் பெறுமதியில் தாக்கம் செலுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.