
ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதுடன், மக்களது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமானதாகும்.
அனைத்து மக்களினதும் வாழ்க்கைத்தரம் மேலும் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு, அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியமானதாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.