தற்போதைய நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இலங்கை கடன்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடனில் இருந்து விடுபட்டு நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவு மிகவும் அவசியமானது.
இவ்வாறு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நட்பு நாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னணி பங்குதாரர் என்ற வகையில், இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை சீனா எப்போதும் ஊக்குவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.