சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெரு நிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முக்கிய அங்கம் என Fitch Rating சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் கீழ் தனிநபர் வருமான வரியும் உயர்த்தப்படும் என்று Fitch Rating நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2024 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் முதன்மை உற்பத்தி 2.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று நிறுவனம் கணித்துள்ளது.