2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு வசதி, பொதுநிர்வாக அமைச்சினால் ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த கால எல்லை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு இடையில் நேற்றைய தினம் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது தற்காலிக இணைப்பு வசதி காலத்தை டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.