ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தையொன்று உயிரிழந்ததுள்ளது.
ஸ்பெய்னின் வட பிராந்தியத்திலுள்ள கட்டலோனியா மாகாணத்தின் கிரோனோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழையுடன் பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்தன.
சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லூ பிஸ்பால் டி எம்போர்டா எனும் கிராமத்தில் பாரிய ஆலங்கட்டி வீழ்ந்ததால் 20 மாத குழந்தையொன்று காயமடைந்தது.
கிரோனா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு இக்குழந்தை அவசரமாக கொண்டு செல்லப்பட்டது. எனினும், சில மணித்தியாலங்களின் பின்னர் இக்குழந்தை உயிரிந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள், வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.