ஒக்டோபர் மாதம் வரையிலான எரிபொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (03) காலை இடம்பெற்றதாக தனது டுவிட்டர் பதிவில் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவை, போக்குவரத்து திட்டங்கள், எரிபொருள் இருப்புகளை பெறுவதற்கான நிதி வசதிகள் தொடர்பில் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.