யாழ்.வடமராட்சி துன்னாலை மேற்கில் உள்ள இரு கிராமங்களுக்கிடையில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலரை தேடி வருவதாக நெல்லியடி பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை குறித்த பகுதியில் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், கற்கள், வாள்கள், போத்தல்களால் இடம் பெற்று வருவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழு மோதல் சம்பவம் தொடர்ப் 7 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினரிடையில் உருவான மோதல் பின்னர் இரு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளதாகவும், குறித்த சம்பவத்தில் நேற்று முன்தினம் இருவர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினுமும் இடையிடையே குழு மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
நேற்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்து மோதல் மீண்டும் நேற்றிரவு பதற்றத்தை ஏற்படுத்தியது என்று பொலிஸார தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் இரவு கடுமையான குழு மோதல் இடம் பெற்றவேளை அதிகாலை ஒருமணியளவில் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குழுமோதலை நெல்லியடி பொலீசார் கட்டுப்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் குழு மோதல் இடம் பெற்றுள்ளது.