
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதியை நிம்மதியாக ஓய்வெடுக்க அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.