மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைமை காரணமாக, மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வடையும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய சபை உறுப்பினர் ருவான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து சுற்று நிருபம் ஒன்றை வெளியிடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.