தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் ஒருவரை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் 19 சைக்கிள்களையும் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மிக நீண்ட நாட்களாக நெல்லியடி போலீஸ் பிரிவில் சைக்கிள் திருட்டு இடம் பெற்றுவருவதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் மக்களால் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலைமையிலான பொலிசாரின் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்துள்ள நிலையில் 19 சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த சந்தேக நபர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இறைச்சிக்காக வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு திருடப்பட்ட பசு மாடுகளையும் மீட்ட நெல்லியடி பொலிசார் குறித்த இரண்டு மாடுகளையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமரித்து வருவதுடன் குறித்த பசுமாடுகளை களவு கொடுத்தவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா விமலவீரந தெரிவித்துள்ளார்