இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கருத்தரங்கு……!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்றையதினம் வடமராட்சி நெல்லியடி திரு இருதய கல்லூரி மண்டபத்தில்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு தலைவர்  சி.ரகுபரன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மங்கல  விளக்குகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் கு.பாலகிருஷ்ணன், பாடசாலை அதிபர் சிறீஸ் குமார், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு செயலாளர் த.பகிரதன்,
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவு  நிர்வாக உத்தியோகத்தர் வே.நாகேந்திரன், வடமராட்சி  கல்வி வலயத்தின் உதவி கல்வி  பணிப்பாளரும், இன்றைய பயிற்சி பட்டறையின் வளவாளருமான உதவி கல்வி பணிப்பாளர் திருமதி சுசீலா கமலதாஸ்,  வடமராட்சி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திரு.யசோதரன்,   உட்பட பலரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து   கருத்துரைகளை  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளை தலைவர் கு.பாலகிருஷ்ணன்,  வளவாளரான திருமதி சுசீலா கமலதாஸ், வடமராட்சி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் திரு.யசோதரன்,  ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து  தரம் 5 புலமை பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இடம் பெற்றது.
 
பிற்பகல் 4 மணிவரை இடம் பயிற்சி பட்டறையில் கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பது செயல்நூல்கள், மாதிரி கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் என்பன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews