
செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், மாநகர சபை உறுப்பினர்களான வரதராஜன் பார்த்தீபன், சிவகாந்தன் தனுஜன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.