
தம்புள்ளை கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து தாய் வீட்டில் இருந்த போது கணவனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை இன்று (05) இடம்பெறவுள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.