
யாழ்.கீரிமலையில் வீடு உடைத்துக் கொள்ளை! புன்னாலை கட்டுவனை சேர்ந்தவர் சிக்கினார்..
யாழ்.கீரிமலையில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புன்னாலை கட்டுவன் பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.