அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த முட்டை வர்த்தகர் மீது அனுராதபுரம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில்,
வர்த்தகர் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து 1 லட்சம் ரூபாய் தண்டம் விதித்த நிதிமன்றம்,
அவரிடம் கையிருப்பில் இருந்த முட்டைகளை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதனடிப்படையில் சுமார் 7500 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன.