கால்நடைகளைக் கொண்டு விவசாயம் மேற்கொள்ளும் முயற்சி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நிலைமை காரணமாகவும், பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலும் கால்நடைகளைக் கொண்டு உழவுகளை மேற்கொள்ள விவசாயிகள் முயற்சித்துள்ளனர்.
கால போக பயிர்ச் செய்கைகான நிலத்தினை பண்படுத்துவதற்கான எரிபொருள் கிடைக்கப் பெறாத காரணத்தினால், பல விவசாயிகள் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சிறுபோக பயிற்சிகளை முடியும் நிலையில் , பெரும் போக பயிற்செய்கை நிலத்தினை பண்படுத்துவதற்கான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சில விவசாயிகள், தமது கால்நடைகளை பயன்படுத்தி நிலத்தினை பண்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது.