எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு! விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் செயற்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் வரி செலுத்தியதன் பின்னர், அரசாங்கத்துக்கு தற்போது ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் இலாபம் கிடைத்து வருகிறது.

விலைச்சூத்திரம் தொடர்பில் சட்ட நிலை எதுவும் இல்லாத காரணத்தால் அரசாங்கம் விரும்பியவாறு செயற்பட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin