இலங்கையில் தினசரி 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் மூடப்படுவதாக வெளியான செய்திகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுதலித்துள்ளது.
இது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிக்கை ஒன்றிணையும் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கூட்டுத்தாபன பௌசர்களுக்கு மேலதிகமாக பௌசர் ஊர்தி உரிமையாளர் சங்கம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் தனியார் பௌசர்களை முழு வீச்சில் பணிக்கமர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
சில தகவல்களின்படி, முன்னுரிமைப் பதிவேடு அறிமுகம், காசோலை வசதிகள் கட்டுப்பாடு போன்றவற்றால் எந்த சுத்திகரிப்பு நிலையமும் மூடப்படவில்லை.
இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளாந்தம் சுமார் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெற்றிக் தொன் பெற்றோல் விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.