
யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் நேற்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.



இருந்தது குறித்த இரத்த தான முகாம் நெல்லியடி பொலிஸ் நிலைய விடுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்க கரவெட்டி கிளை தலைவர் ஆர் ரகுபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பொலிஸ் சேவை 156 ஆவது ஆண்டை முன்னிட்டு நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் காஞ்சன விமலவீர தலமையிலான பொலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் 25 பேர் குருதிக் கொடை அளித்தனர்.
குருதியை பெற்றுக்கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் சமூகமளித்திருந்தனர்.
இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கரவெட்டி கிளை பிரிவின் செயலாளர் பகிரதன் p.பகீரதன் நிர்வாக செயலாளர் வீ நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்